இரண்டு மாதங்களில் மூன்று கப்பல்களில் புலிகளுக்கு ஆயுதம்!

இரண்டு மாதங்களில் புலிகளுக்கு மூன்று கப்பல்களில் ஆயுதம் வந்திறங்கியுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. புலிகளின் ஆயுத கப்பல்கள் 10க்கு மேற்பட்டவை தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையிலேயே புலிகளுக்கு ஆயுதம் வந்திறங்கியுள்ளதாகவும் இதனை தொடர்ந்தே வெலிஒயா, வன்னி முன்னரங்க நிலைகள் மீது புலிகள் ஏறிகணை தாக்குதலை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஜ.தே.க. வெற்றிபெறுவது உறுதியென்கிறார் ரணில்!

கிழக்கு மாகாணம் மீண்டும் ஆயுதக் குழுவிடம் செல்வதை தடுத்து நிறுத்தி கிழக்கு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து களத்தில் குதித்துள்ளனர். தேர்தலில் கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வன்னிபுலிகளின் ஆயுத களஞ்சியம் மீது விமானதாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த புலிகளின் ஆயுத களஞ்சியசாலை மீது நேற்று மாலை 4:30 மணியளவில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சாரங்கள் முடக்கம்! திருமலை அலுவலகங்கள் மூடல்!

ஈ.பி.டி.பி.யில. இருந்து வெளியேறி த.வி.கூ., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணி ஆகியவற்றுடன் இணைந்து கட்சியொன்றினை பதிவு செய்துகொண்ட கல்லாநிதி விக்கினேஸ்வரன் கட்சியின் பெயரை அபகரித்துக்கொண்டு சில தீயசக்திகளின் துணையுடன் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ததுடன், தேர்தல் பிரச்சாரங்களையும் சிலரை ஏமாற்றி மேற்கொண்டு வருகின்றார்.

புலிகளின் தொலைக்காட்சியான ரி.வி.ஜ. தொலைக்காட்சியின் முக்கியஸ்தர் வி.என்.மதியழகன் கொழும்பு வருகை!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னைநாள் செய்தியாளரும் தற்போது கனடாவில் ஒளிபரப்பாகிவரும் புலிகளின் தொலைக்காட்சியான TVI என்ற தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்துவருபவருமான வி.என். மதியழகன் தனது புத்தக வெளியீடு ஒன்றுக்காக கொழும்புக்கு வருகை வருகைதந்துள்ளார்.

கனடாவில் புலிகளின் பலாத்கார நிதிசேகரிப்புக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்!

பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கம் இயக்கம் மற்றும் அவர்களின் முன்னணி அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள கனேடிய புலனாய்வு பொலிஸார் புலிகளின் முன்னணி அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தின் அலுவலகத்தை சீல் வைத்துள்ளனர். அங்கிருந்து எடுத்துச்சென்ற பத்திரங்களை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் நேற்றையதினம் கனடாவின் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 180 பக்கங்களைக் கொண்ட மேற்படி பத்திரம் உயர் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதை கனடாவின் புலனாய்வு பொலிஸாரான ஆர்.சி.எம்.பி. பொலிஸாரும் உறுதி செய்துள்ளனர். விரிவான செய்திகளுக்கு

விக்கினேஸ்வரனின் அரசியல்கட்சி இரண்டாக பிளவு! தேர்தலில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மேற்படி கட்சி ஆலோசனை!

ஈ.பி.டி.பி.யின் முன்னால் ஆலோசகரான கா.விக்கினேஸ்வரனின் அகிலஇலங்கை தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி தோடம்பழ சின்னத்தில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது. பொதுமக்கள் மற்றும் சமூகத்தில் பிரபல்யமானவர் பலரை போலி ஏமாற்று கதைகளை கூறி அவர்களின் உதவியுடன் கிழக்கு மாகாணசபைக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களில் இருவர் விக்கினேஸ்வரனின் அகில இலங்கை தமிழர் கூட்டணியை விட்டு தமது ஆதரவாளர்கள் 28பேருடன் அவ் கட்சியில் இருந்து வெளியேறி விக்கினேஸ்வரனின் மாஜ ஜாலத்தை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கிண்ணியாவில் தபால் உழியர் மீது துப்பாப்பாக்கி சூடு!

கிண்ணியா தபாலகத்தில் வைத்து தபால் ஊழியர் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார். ஆடையாளம் தெரியாதநபர்களின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இவரது உடலில் பல துப்பாக்கி சூட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கிண்ணியாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

தடங்கலுக்கு வருந்துகின்றோம்!

எமது செய்தி சேவையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமது செய்தியில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம்.
-நெருப்பு ஆசிரியபீடம்!

அரசியல் அந்தஸ்தையும் அதிகார பரவலாக்கலையும் வேண்டி போராடிய மக்கள் அடிப்படை உரிமைகள் அடிப்படை உரிமைகள் அற்ற நிலையில்-புளொட்!

தமிழ்பேசும் மக்கள் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பனவற்றை இழந்து அர்த்தமற்ற யுத்தமொன்றினால் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேறி அடிப்படை வசதிகளற்று நிற்கின்றனர்.